நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் உறுதியான தன்மையை நலிவடைய செய்து அக்காரியலயத்தை பிரிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியை முறியடிப்பதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து வெற்றியும் கண்டார் எஸ் எம் சபீஸ்
இவ்விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வரை கொண்டு சென்று அக்கரைப்பற்றுக்கு அமைச்சர் ஹகீமோடு வருவதற்கு விருப்பமில்லாமல் தமது விஜயத்தை ஜனாதிபதியும் பிரதமரும் இரத்துச் செய்யும் அளவிற்கு அவ்வார்பாட்டத்தில் மக்கள் வெள்ளமாக கலந்து சபீசை பலப்படுத்தினர்.
இந்நிலையில் ஒருநகரின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் பல நிறுவனங்களின் பிராந்திய காரியாலயங்களும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர் காரியாலயமும் கல்முனையில் இருக்கத்தக்கதாக அக்கரைப்பற்றில் உள்ளவைகளையும் பிரித்து இக்காரியாலயத்தை நலினப்படுத்துவது மனசாட்சி அற்ற செயலாகும்.
கல்முனையில் உள்ள காரியாலயங்களுக்கு இங்கிருந்து செல்லும் மக்கள் குறைந்தது தேனீராவது குடித்துவிட்டுத்தான் திரும்பி வருவர், அதேபோன்று அக்கரைப்பற்று காரியலயதுக்கு வருகின்றவர்கள் அட்டாளைச்சேனையில் இளநீர் குடித்துவிட்டு போகட்டுமே இதனால் பலரின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்குமல்லவா?.
ஒரு தலைவன் தனது மக்கள் வாழவேண்டும் என நினைப்பது இனவாதம் கிடையாது, தனது மக்கள் மட்டும்தான் வாழவேண்டும் என நினைப்பதுதான் இனவாதம். ‘இது போன்றுதான் பிரதேச வாதமும்’இதனைத்தான் விடுதலைப் புலிகளும் யாழ்பாணம் தொடக்கம் அரங்கேற்றி அழிந்து விட்டனர். இதனை நேசத்துக்குரிய கல்முனை மக்கள் புரிந்து கொள்வர் என நாங்கள் நம்புகிறோம்.
வேலை வாய்ப்பு பணியாக காரியாலயத்தை தக்கவைத்து கொள்ள முடியாத சோம்பேறி தலைமைகள் நமது மக்களை பிரித்து ஊர்வாதத்தை உண்டு பண்ணி நமது சூட்டில் குளிர்காய எத்தனிக்கின்றனர். இதனை கல்முணைவாழ் எமது உடன்பிறப்புக்கள் இதன் பின்னணி உண்மையை புரிந்து கொள்வர் என எமது மக்கள் நம்புகின்றனர்.
ஆகவே அக்கரைப்பற்று பிராந்திய காரியாலய பிரிப்புக்கு உடனடியாக தடை உத்தரவு வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் எங்களது மக்களோடு சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவோம் என எஸ் எம் சபீஸ் எச்சரித்துள்ளார்.