எம்.எம்.ஜபீர்
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பிரதேச மக்களும், பிரயாணிகளும் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு வெள்ளரிப் பழம், இளநீர், நுங்கு, பழங்கள் பேன்ற நீர்த்தாகத்தினை போக்குவதற்கு உணவுகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பிரதேச மக்களும், பிரயாணிகளும் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு வெள்ளரிப் பழங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் வீதியோரங்களிலும், கல்முனை சந்தையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளரிப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதையும் கல்முனை நகரிக்கு வெள்ளரிப்பழ் வியாபாரிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகின்றது.
பிரயாணிகளின் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதான வீதிகளின் ஒரோத்தில் வெள்ளரிப் பழம், இளநீர், நுங்கு போன்ற வியபாரிகள் உணவுகளை விற்பனை செய்துவருகிமையை காணக்குடியதாகவுள்ளது.