ஐ. தே. கட்சியின் அரசாங்கத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் குறைபாடு: எஸ்.பி. திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் குறைபாடு இருப்பதை காணமுடிகிறது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
S.B.Disanayake

எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹேவாஹெட்ட பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை வழங்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.