இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்!!

Par8318630

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் (குரூப் 1) அணிகள் மோதுகின்றன.

டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணிமுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 229 ரன் குவித்தும் இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடி உள்ளது.

ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டிவில்லியர்ஸ், டுமினி போன்ற அதிரடி வீரர்களை கொண்ட அந்த அணி ஆப்கானிஸ்தானை தோற்கடித்து முதல் வெற்றியை பெறும் நம்பிக்கையுடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. 
தென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க அந்த அணி கடுமையாக போராட வேண்டும். இரு அணிகளும் மோதிய ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டாரன்சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் – மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கி றது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கிறிஸ் கெய்ல் 47 பந்தில் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தை சமாளிக்க இலங்கை அணி கடுமையாக போராட வேண்டும். இது தவிர சாமுவேல்ஸ், பிராவோ, கேப்டன் சேமி, ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் மேத்யூஸ், தில்சான், சன்டிமால், பெரைரா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுகிறார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். கிறிஸ் கெய்ல் மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இரு அணிகளும் 8 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.