சிசு மூச்சு திணறி உயிரிழப்பு – தலவாக்கலையில் சம்பவம்!

க.கிஷாந்தன்

 

தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால் அச் சிசு மூச்சு தினறி உயிரிழந்துள்ளது.

 

இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில் 17.03.2016 அன்று இடம் பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் 18.03.2016 அன்று தெரிவித்தார்.

 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 

வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவின் தாய். வீ. முருகாந்தினி இவர் உயிரிழந்த குறித்த சிசுவை 7 மாதத்தில் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார்.

 

வலிப்பு (பிட்) நோய் மற்றும் குருதி அழுத்த நோயினால் பீடிக்கப்பட்டதன் காரணமாகவே இவர் 7மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்க கூடிய நிலை உருவாகியுள்ளது.

 

சம்பவ தினமான 17ம் திகதி இரவு வழமைபோல் சிசுவுக்கு பால் கொடுத்துள்ளார். இதன் போது பால் குழந்தையின் மூச்சி குழாயில் சென்று தினறல் ஏற்பட சிசுவை அருகில் உள்ள வட்டகொடை வைத்தியசாலைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கிருந்து  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்ட சிசுவை கொண்டு செல்ல அம்புலண்ஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வாகனத்தினூடாகவே கொண்டு சென்ற வேளையில் இடைநடுவில் நள்ளிரவு 2 மணியலவில் சிசு மரணமடைந்துள்ளது.

 

சிசுவின் மரண பரிசோதணையை மேற்கொண்ட நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரி டப்ளியூ.ஜீ.எஸ். குமாரதுங்க மேற்கொண்டார். இதன் போது சிசுவின் மூச்சி குழாயில் பால் இறுகியதனால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை சிசுவின் மரணவிசாரணையை நகா பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.ஆர். உடுகமகெதர முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.