இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே அதீத முக்கியத்துவம்: அஸ்வின்

1b9b2b69-cf53-4b63-a6e3-44b82f52319d_S_secvpfஇந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பரம போட்டியாளர்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே அதீத முக்கியத்துவம் பெற்று விடும். இது எவ்வளவு மிகப்பெரிய ஆட்டம் என்பதை சொல்வது கடினம். அனேகமாக இது ஆஷஸ் கிரிக்கெட் (ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர்) தொடரை விட பெரியது என்று சொல்லலாம். இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரை, இதை ஒரு கிரிக்கெட் விளையாட்டாக மட்டும் பார்ப்பதில்லை. 

எல்லையில் இரு நாட்டு படைகள் மோதுவது போன்றே பார்க்கிறார்கள். அவர்கள் போட்டியோடு தங்களது உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு, முழு திறமையை வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் கவனம் செலுத்துகிறோம். முடிந்த வரை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பதற்றமின்றி எளிதாக எடுத்துக்கொள்ள முயற்சிப்போம். 

அந்த அணிக்கு எதிராக இதற்கு முன்பு நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். ஒவ்வொரு ஆட்டமும் இந்தியாவுக்கு நெருக்கடி தான். ஆனால் நெருக்கடியை சமாளிக்கக்கூடிய திறமை, அனுபவம் எங்களுக்கு உண்டு. சரிவில் இருந்து நாங்கள் மீள்வோம். தொடக்க ஆட்டத்தில் தோற்று, அதன் பிறகு ஒரு அணி எழுச்சி பெறுகிறது என்றால், அது இந்தியாவாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.