சபீசின் போராட்டத்தால் ஜனாதிபதியின் விஜயம் ரத்து ?

சபீசின் போராட்டத்தால் ஜனாதிபதியின் விஜயம் ரத்து ?

 

safees

நேற்று அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போராட்டம் அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் காரியாலய பிரிப்புக்கு எதிராக எஸ் எம் சபீசால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இப்போராட்ட நிகழ்வுகளை பெரும்பாலான அச்சு , இலத்திரனியல் ஊடகங்கள் வெளிப்படுத்தி இருந்தன , இதன் விளைவாக அக்கரைப்பற்றுக்கான தனது விஜயத்தை ஜனாதிபதி அவர்கள் இரத்துச் செய்திருக்கலாம் என அங்கிருக்கும் மக்கள் பேசிக் கொள்கின்றனர் .