அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கியுள்ள ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

 

IMG_0453_Fotor

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தின் நீச்சல் தடாகத்தினை சென்றடையும் உள்ளக வீதி அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இருபது லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூடம் என்பவற்றை திறந்து வைப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை (19) காலை அக்கரைப்பற்றுக்கு வருகை தரவுள்ளார்.

IMG_0455_Fotor
இவ்வருகையை முன்னிட்டு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தின் வேலைகளின் முன்னேற்றத்தை பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் சென்றிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தினை சென்றடையும் உள்ளக வீதியினை அபிவிருத்தி செய்து தருமாறு பிரதி அமைச்சரிடம் கொடுத்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைவாக நீச்சல் தடாகத்தினை சென்றடையும் உள்ளக வீதியின் அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன் ஜனாதிபதியின் வருகையையிட்டு வேலைகள் மும்முரமாக இடம்பெற்று முடிவடைந்துள்ளது.

harees thavam