யோஷித அதிகமாக யுக்ரேன் நாட்டிற்கு பயணித்துள்ளதோடு, அவரது பயணித்தின் எண்ணிக்கை 11 !

Yoshitha-Rajapaksa
பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ நிபந்தனை பிணையில் விடுதலையானார்.

இந்நிலையில் 2006ஆம் ஆண்டு இறுதியில் கடற்படையில் இணைந்த யோஷித, 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி வரையில் 27 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்றுக்கு தெரியவந்துள்ளது.

இதற்காக உத்தியோகபூர்வ அனுமதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் கிடைத்துள்ளது.

யோஷித அதிகமாக யுக்ரேன் நாட்டிற்கு பயணித்துள்ளதோடு, அவரது பயணித்தின் எண்ணிக்கை 11 ஆகும்.

ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு மூன்று தடவைகளும், கொரியா மற்றும் அஸ்திரேலியாவுக்கு இரண்டு தடவைகளும், அமெரிக்கா, ஈரான், ஹொங்கொங், ஜப்பான், மலேஷியா, மியான்மார், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவுக்கு ஒரு முறையும் சென்றுள்ளார்.

வெளிநாட்டு பயிற்சிக்காக 12 சந்தர்ப்பங்களும், ரகர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி 6 சந்தர்பங்களும் தனிப்பட்ட பயணமான 6 சந்தர்ப்பங்களும் கடமை தொடர்பில் 3 சந்தர்ப்பங்களும், விசேட கடமை மற்றும் தேசிய துப்பாக்கிச் சூடு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு தடவையும் வெளிநாட்டிற்கு யோஷித ராஜபக்ச பயணம் மேற்கொண்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் வழங்கப்பட்ட பதிலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

யோஷித ராஜபக்ச உக்ரைன் பாதுகாப்பு கல்வியில் பட்ட மேற்படிப்பு ஆய்வுகள் மேற்கொள்வதாக கூறப்பட்டன, எனினும் அதற்கு சமமான காலப்பகுதியினுள் உக்ரைன் போராளிகளுக்கு இந்த நாட்டு அமைப்பொன்றினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு தொடர்பில் எவ்விதமான விசாரணைகள் கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.