மு.கா மாநாடு – அம்பாறை மாவட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு !

அபு அலா
DSC_1390_Fotor
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு தொடர்பில் அம்பாறை மாவட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எம்.முஹம்மட் நஸீரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எம்.முஹம்மட் நஸீரின்  தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள்  கொண்ட குழுவினருடன்களுடனான  மிக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இதன்போது பாதுகாப்பான முறையில் மேடை மற்றும் நுளைவாயில் அமைத்தல், மைதானத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்  ஜனாதிபதியின் வருகை தொடர்பாக அக்கரைப்பற்று, குடியிருப்பு, ஒலுவில் துறைமுகம் மற்றும் பாலமுனை போன்ற மைதானங்களை பார்வையிட்டனர்.

thavam nazeer
இதேவேளை, மாநாடு நடைபெறும் இடத்திற்கு இக் குழுவினர் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளையும் அறிந்து பொதுமக்களின் வசதிகருதி அமைக்கப்படவுள்ள கூடாரங்களை ஜனாதிபதியின் பாதுகாப்புக்கேற்றாப்போல் அமைக்கப்படல் வேண்டும் என்ற முன்னறிவித்தல்களை மாநாட்டு ஏற்பாட்டு குழுவினருக்கு விஜயம் செய்த குழுவினரால் அறிவுறுத்தல் வழங்கிவைக்கப்பட்டது.