முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தனது சகாவொருவரின் மரணத்திற்கு காரணமாகவிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச சிங்க படைப்பிரிவில் பணியாற்றிய காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவ்வேளை கோத்தபாய காட்டிற்குள் தனது நண்பர்களுடன் சென்றார், அவர் இராணுவ நடவடிக்கைகளிற்காக செல்லவில்லை. காட்டிற்குள் இருந்தவேளை படைவீரர் ஒருவர் நெஞ்சுவலி என முறையிட்டார். கோத்தபாய அவரை இழுத்து வருமாறு உத்தரவிட்டார். அவரின் மீது காலால் உதைந்தார். இறுதியில் அந்த இராணுவவீரர் மரணித்தார். இதனால் அவருடைய நண்பர்கள் கடும் சீற்றமடைந்திருந்தனர் என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.