டொக்டர் தாரிக் வபாத்தானார் !

சத்தார் எம் ஜாவித்

 

janaza

மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான டொக்டர் அப்துல் காதர் தாரிக் இன்று (16) இரவு 8.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார்.

 
சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவருக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக இன்று கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.
இவர் மஹரகம புற்று நோய் வைத்தியசாலை உள்ளிட்ட கொழும்பில் பல அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றி இறுதியாக கொட்டகேன வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
இவர் முன்னாள் மன்னார் மாவட்ட அரச அதிபரும், கல்லிமானுமாகிய மர்ஹூம் அப்துல் காதர், மர்ஹூமா லைலா ஆசிரியரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
இவரின் ஜனாஸா இலக்கம் 35, 2nd  Chapal Lane, wellawatta (வெள்ளவத்தை) இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நாளை தெஹிவலை ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.