அஸ்மி அப்துல் கபூர் (தேசிய காங்கிரஸ் – முந்நாள் மாநகர சபை உறுப்பினர் ) ஊடக அறிக்கை
அரசியல்வாதிகள் பிரதேச வாதம் என்கின்ற ஒரே நகர்வினூடாக தமது சுய லாபங்களை அடைய முயல்கின்றனர்.
கல்முனையிலிருந்து அம்பாரைக்கு ஒரு நிறுவனம் இடம் மாற அதை பெற்றுக் கொடுப்பதை விடுத்து அக்கரைப்பற்றில் இருக்கும்ஒரு நிறுவனத்தை கல்முனை க்கு கொண்டு செல்கின்றர்.
அதற்கு அரசியல் வாதிகளின் சுய நல நகர்வுகளே காரணமாகும் கல்முனை மக்களல்ல.
சிலர் இதை கல்முனைக்கெதிரான பிரதேசவாத கருத்துகளை நுழைத்து அரசியல் லாபமடைய முனைகின்றனர்.இதற்க்கு நாம் ஒரு போதும் உடன்பாடுகிடையாது.
கல்முனை மக்களும் இந்த நியாயபூர்மான அக்கரைப்பற்றினுடைய அபிலாசைகளை ஏற்றுக் கொள்கிற
மனநிலை பெற வேண்டும். பிரதேசவாதத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் இரண்டு ஊர்களும் ஏனைய முஸ்லீம் பிரதேசங்ளும் அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்காது செயற்பட வேண்டும்.
பிரித்து வைத்தல் அரசியல்வாதிகளின் நலனுக்காகவே தவிர சமுக நலனுக்காக அல்ல. முஸ்லீம் என்கிற அடையாளமும் பிராந்திய ரீதியான நியாயமான பங்கீடுகளும் வலுவாக பேசப் படவேண்டும்.
நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினுடைய பிராந்திய காரியலய இடமாற்றம் குறித்த அக்கரைப்பற்று மக்களின் நியாயமான விடயங்களை புரிந்து காத்திரமான நடவடிக்கைகளை மேற் கொள்ள அணைத்து பிராந்திய மக்களும் ஒண்றிணைவோம்.
மக்களை சூடாக்கி பிரிவிணையை வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் உடன்பாடு காண முடியாது.