இலங்கை அணியின் இரண்டு தூண்காளாக விளங்கிய ஜெயவர்த்தனேவும், குமார் சங்ககாராவும் ஓய்வு பெற்ற பிறகு அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. டி20 ஆசியக் கோப்பை தொடரில் வாங்காளதேசத்தைக் கூட தோற்கடிக்க முடியாமல் அவமானப்பட்டது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 10 ஆட்டங்கள் நேற்று தொடங்கியுள்ளது. நாளை கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க்கொள்ளவுள்ளது இலங்கை. தன்னம்பிகை இழந்து தடுமாறிவரும் இலங்கை அணிக்கு ஆலோசனை வழங்கவும், ஊக்கமளிக்கவும் குமார் சங்ககாராவை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.