தகுதி இருப்பவர்களுக்கு அதிர்ஸ்டம் இருப்பதில்லை அதிர்ஸ்டம் இருப்பவர்களுக்கு தகுதி இருப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உடன்படிக்கைகளையும் தாமே தயாரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் முதல் பொதுச் செயலாளர் பதவிக்காக தமது பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், சுசில் பிரேமஜயந்தவே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.