அமெரிக்க அதிபர் தேர்தல் : வேட்பாளர் போட்டியில் ஹிலாரி–டிரம்ப் வெற்றி !

Trump-Hillary-Bill_Fotor

 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு செய்யும் போட்டி நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் கோடீசுவரர் டொனால்டு டிரம்பும் முன்னிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ‘சூப்பர் செவ்வாய்கிழமை’ என்றழைக்கப்படும் வாக்கெடுப்பு தினம் நேற்று 2–வது தடவையாக நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் புளோரிடா, ஒகியோ மற்றும் வடக்கு கரோலினா ஆகிய 3 மாகாணங்களிலும் அமோக வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ் 3 மாகாணங்களிலும் தோல்வி அடைந்தார்.

குடியரசு கட்சியில் புளோரிடா, ஒகியோ ஆகிய 2 பெரிய மாகாணங்களில் தேர்தல் நடந்தது. அதில் புளோரிடாவில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

அங்கு இவரை எதிர்த்த மார்கோ ரூபியோ தனது சொந்த மாகாணத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் மற்றொரு மாகாணமான ஒகியோவில் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இங்கு இவரை எதிர்த்து போட்டியிட்ட ஒகியோ மாகாண கவர்னர் ஜான் சுசிச் வெற்றி பெற்றார். ஒகியோ, புளோரிடா ஆகிய பெரிய மாகாணங்கள் டிரம்ப்பின் வேட்பாளர் தேர்வை உறுதி செய்யும் நிலையில் இருந்தன. அதில் ஒகியோவில் டிரம்ப் தோல்வி அடைந்தது. அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஜனநாய கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளிண்டன் அதிக இடங்களில் வெற்றி பெற்று யாரும் எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, அவர் அக்கட்சியின் இறுதி வேட்பாளராகும் தகுதியை பெற்றுள்ளார்.

குடியரசு கட்சியில் தற்போதுதைய நிலவரப்படி டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். ஒகியோவில் தோல்வி அடைந்தாலும் ஜூலை மாதம் வரை நடைபெற உள்ள தேர்தல்களில் இன்னும் கூடுதல் வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. எனவே இறுதி போட்டியில் இவருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.