கண்டனப் பேரணிக்கு அழைப்பு; எஸ் எம் சபீஸ் கைது ?

athaullah safees 
அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு 
 தொடர்பாக எஸ் எம் சபீசினால் விடப்பட்ட அறிக்கையும் துண்டுப்பிரசுரங்களும் அக்கரைப்பற்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் ,
 
வருகின்ற வெள்ளிக்கிழமை (18.03.2016) ஜும்மா தொழுகையை தொடர்ந்து பாரிய கண்டனப் பேரணிக்கு அவரது முகநூலில்  அழைப்பு விடுத்துள்ளார்  இப்பேரணி அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வாசலில் இருந்து ஆரம்பித்து பிரதேச செயலாளர் காரியாலயம் வரை சென்று ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று கையளிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது 
 
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவால் கட்டப்பட்ட அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் உள்ள நீச்சல் தடாகம்,விஞ்ஜான ஆய்வுகூடம் மற்றும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம் போன்றவற்றை  திறப்பதற்காக மு கா  மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஹகீம் ஆகியோரைக் கொண்டு வருவதற்கான  ஏற்பாடுகள் மு கா உறுப்பினர்களால் மேற்கொள்ளப் படுகிறது 
 
இவ்வேளையில் பாரிய கண்டனப் பேரணிக்கு எஸ் எம் சபீஸ் அழைப்பு விடுத்திருப்பதனால் இவர்  பொலிசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . 
 
 
எவ்வாறு இருந்தாலும் அக்கரைப்பற்று இளைஜர்களினதும் அங்குள்ள மக்களினதும் மனோ நிலை பிராந்திய காரியாலய பிரிப்புக்கு எதிராக உத்வேகம் அடைந்துள்ளதனால் இவ் கண்டனப் பேரணியை தடுத்து நிறுத்த முடியாது அதேபோல் எஸ் எம் சபீஸ் கைது செய்யப்பட்டால் போராட்டங்களும் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்