ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் !

President-Maithripala-Sirisena5
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மே  மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிக அமைச்சர்கள் நியமனத்தைத் தடை செய்து ஜனாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி என்பவறால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகமானோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி, அமைச்சரவையில் உறுப்பினர்கள் 30 பேரே இருக்க முடியும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனினும், தற்போதைய அமைச்சரவையில் அதற்கு மேலதிகமாக உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதனால் அரசியலமைப்பு வறையறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், குறித்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த மனுவை மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.