நாட்டை கட்டியெழுப்புவதற்கு இது சரியான தருணம் : சந்திரிக்கா பண்டாரநாயக்க !

chandrika
பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை வெற்றிக் கொண்ட போதிலும், சமாதானத்தை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இது சரியான தருணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியாளர் இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்ததாக நினைவூட்டிய அவர், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது சரியான தருணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் முதலாவது தருணம் இதுவென சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.