துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிளிலே சதுக்கம் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய காரினை வெடிக்க செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை அடுத்த பூங்கா அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியானது மந்திரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் அஹ்மெத் தாவுதோக்ளு அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த 5 மாதத்தில் நடைபெற்ற 3-வது பெரிய தாக்குதல் இதுவாகும்.