சுதந்திரக் கட்சி அல்லாத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது , இன்று எழுத்து மூலம் அறிவிக்கப்படும் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லாத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என கட்சியின் உறுப்பினர்களுக்கு இன்று எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் …

dumintha thumintha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து கட்சியின் உறுப்பினர்களுக்கும் இன்று எழுத்து மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்ய சிறு தரப்பினர் சூழ்ச்சி செய்கின்றார்கள். இந்த சூழச்சியை முறியடிக்கவும்ää கட்சியின் ஒழுக்கத்தைப் பேணி பாதுகாக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அமைப்பு கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இந்த கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது.

எனவே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்கு தொடர்பு இல்லாத அமைப்புடன் தொடர்பு பேண முடியாது.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கட்சியின் யாப்பு விதிகளின் அடிப்படையில் கடுiமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது பற்றி அனைத்து கட்சியின் உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.