வீரம் நிறைந்த மனதோடு புறப்படுங்கள் !!!!

அக்கரைப்பற்றில் எங்குபார்த்தாலும் பேசப்படும் ஒரு விடயமாக அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு மாறியுள்ளது 
 
இது தொடர்பாக எஸ் எம் சபீசினால் விடப்பட்ட அறிக்கையின் மூலம் அக்கரைப்பற்றே கொந்தளித்துப்போய் உள்ளதோடு அம்மக்கள் ஏதோவொன்றை இழந்த சோகத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது 
 
அக்கரைப்பற்று மக்கள் .வருகின்ற தினங்களில் பாரிய போராட்டங்களையும் கதவடைப்புக்களையும்  நடத்தலாம்  என எதிர்பார்க்கக் படுகிறது 
 
 
எஸ் எம் சபீசின் அறிக்கை,
 
 
athaullah safees
 
தென்கிழக்கு அலகு வேண்டும் என கூறும் நீங்கள், ,கரையோர மாவட்டத்தின் கச்சேரி கல்முனையில்தான் அமையப்பெற வேண்டும் என எதிர்பார்க்கும் உங்களால் நீர் வளங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபையின் பிராந்திய காரியாலயம் அக்கரைப்பற்றில் இருப்பதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் வேற்காடுகொண்டு அலைவது எதற்க்காக?
 
 
 
கல்முனையில் அமைந்திருந்த வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தை தக்கவைத்துக் கொள்ள திராணியற்ற உங்களால் அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபையின் பிராந்திய காரியாலயத்தை இரண்டாக உடைத்து கொண்டு போவதற்கு உங்கள் மனசாட்சி எவ்வாறு இடம் கொடுத்தது?
 
 
 
பிராந்தியக் காரியாலயம் அக்கரைப்பற்றில் இருந்தாலும் கல்முனை மக்களுக்கு துணைக் காரியாலயத்தை உருவாக்கி அப்பகுதி மக்களின் தேவைகளை இலகுவாக்கிக் கொடுத்தாரே அதாஉல்லா அதுபோன்று கல்முனையில் உள்ள எந்தவொரு காரியாலயத்துக்காவது களியோடை பாலத்துக்கு தெற்கு பக்கம் ஏதாவதொரு துணைக் காரியாலயம் உள்ளதா? அப்போ நீங்கள் பிரதேசவாதம் பேசுகின்றீர்களா? இல்லை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று மக்கள் பிரதேசவாதம் பேசுகின்றார்களா?
 
 
 
யுத்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முன்னிலையில் இருந்தது அக்கரைப்பற்றுத்தான், அங்கிருந்த பாடசாலைகள், வைத்தியசாலை ,மைதானம்,பொதுச்சந்தை, வாசிகசாலை என அனைத்துமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களை இறைவன் கைவிட்டுவிடமாட்டான் என்பதை நம்பிய எங்கள் மக்களுக்கு இறைவன் அதாஉல்லா என்றொரு தலைமையின் மூலம் இழந்தவற்றை பெற்றிட உதவி செய்தான்
பல பிராந்திய காரியாலயங்கள் கல்முனையில் இருக்க கரையோரப் பிரதேசங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அக்கரைப்பற்றுக்கு நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய காரியாலத்தை கொண்டுவருவதில் வெற்றி கண்டார் .
அதாஉல்லா அல்ஹம்துலில்லாஹ்.
 
 
 
ஆனால் பொறாமை, பிரதேசவாதம் பிடித்தலையும் ஒருசில எச்சப் பேய்களுக்கு அது பொறுக்க வில்லை. எல்லாமே தனக்கும், தனதுகிராமதுக்கும்தான் கிடைக்க வேண்டும் என்ற சுயநல எரிச்சலால் கொந்தளித்தார்கள், எவ்வாறு இதனை அழித்துவிடலாம் என எண்ணி அதற்கு தக்க தருணம் வரும்வரை காத்திருந்தார்கள்.
ஹகீம் அமைச்சரானதும் அக்கரைப்பற்றில் இருந்த முகாமையாளரை தூக்கிவிட்டு தமக்கு சாதகமான,எதற்கும் தலை ஆட்டக்கூடிய ஒருத்தரை நியமித்து எவ்வாறு அக்கரைப்பற்று காரியாலயத்தை அழிக்கலாம் என திட்டம் போட்டார்கள்,
 
 
 
அக்கரைப்பற்றில் நீர்வழங்கள் சபைக்கு சொந்தமான கட்டடம் இருப்பதனால் உடனடியாக அழித்துவிட முடியாது ஆகவே சிறிது சிறிதாக அழிப்பதற்கு திட்டம் தீட்டினார்கள்
முதலில் கல்முனைக்கென்று வேறொரு பிராந்திய காரியாலயத்தை உருவாக்கி அக்காரியாலயதுக்கு 38000ம் மேற்பட்ட நீர் இணைப்புக்களை பிரித்துக் கொடுத்து அக்கரைப்பற்றுக்கு 28000ம் குறைந்த நீர் இணைப்புக்கள் கொண்டதாக மாற்றவேண்டும் என முடிவெடுத்தார்கள். 
 
 
 
அதனை இப்போது நிறைவேற்றி தமது திட்டத்தின் முதலாவது பணியை முடிவுறுத்தி உள்ளார்கள்
எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமான பிராந்திய காரியாலயங்கள் அம்பாரை மாவட்டத்தில் தேவை இல்லை எனக்கூறி குறைந்தளவு நீர் இணைப்புக்களை கொண்டுள்ள அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தை மூடிவிட திட்டம் தீட்டி உள்ளார்கள்.
 
 
 
அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் இறைவனை நம்புவர்கள்
அக்கரைப்பற்று மக்களை விற்றாவது பணம் சம்பாதித்து தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நமது ஊரைப்பற்றிய சிந்தனை இருக்காது விடுங்கள், அவர்கள் அவ்வளவுதான் —
நாம் மக்கள் என்ன செய்யப்போகிறோம்.
 
 
 
அக்கரைப்பற்றுக்கு பிராந்திய காரியாலயத்தை கொண்டு வர நினைத்தபோது கல்முனையில் உள்ள உப காரியாலயத்தை அதாஉல்லா அக்கரைப்பற்றுக்கு கொண்டு செல்லப்போகிறார் என பொய்வதந்தியை பரப்பி கல்முனையில் உள்ள பாடசாலைகளை, மூடி, கடை அடைத்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்தார்களே; நாம்,நமது மக்கள் என்ன செய்யப்போகிறோம்?
 
 
 
நம் மக்களையும் நமது சொத்துக்களையும் பாதுகாக்க சிறுபராயத்தில் கூறிய கதை போன்று கடாபி வந்து நம்மைக் காப்பாற்ற முடியாது.
ஒருசில கயவர்களின் துணையோடு நமது கழுத்தை அறுக்க வரும் வஞ்சகர்களுக்கு எதிராக போராட நாம்தான் விழித்தெழு வேண்டும்—- வஞ்சகர்களின் செயற்பாட்டை மேலிடங்களுக்கு தெரியப்படுத்தி நீதிபெற்றுக் கொள்ளவேண்டும்..
 
 
 
வீரம் நிறைந்த மனதோடு புறப்படுங்கள்