ரிசாதின் மரணத்திற்கு நாள் குறிப்பு! :
இனவாதத் தேரர்கள் களத்தில் குதிப்பு!!
துஆ பிரார்த்தனையில் முஸ்லிம் சமுகம்!!!
முகம்மட் நுபைஸ் (மாளிகாவத்தை)
அமைச்சர் ரிசாத் பதியுதீனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற இனவாத தேரர் கூட்டம் ஆரம்பித்த சூழ்ச்சித் திட்டம் இன்று அதிஉச்சத்தை அடைந்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
மகிந்த ஆட்சிக் கவிழ்ப்போடு ரிசாதின் மரணத்திற்கு நாள் குறித்த இனவாதத் தேரர் கூட்டம், இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு அதனை நிறைவேற்ற களத்தில் குதித்துள்ளதாகவும் அறியவருகின்றது.
மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமான விகாரை என வர்ணிக்கப்படும் அபேயராம விகாரையில் வைத்தே ரிசாதின் மரணத்திற்கு நாள்குறிக்கும் சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்ற உண்மையும் தற்போது மெல்லக் கசிந்துள்ளது.
மகிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னின்ற சிறுபான்மையின அரசியல் வாதிகளுள், முதலாவது மகிந்தவை விட்டு வெளியேறியவர் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே ரிசாதுக்கு இந்த மரண நாள்; குறிப்பு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்கள் ஊடாக ரிசாதை மரணிக்கச் செய்வதன் மூலம் பௌத்த மக்கள் கிளர்ந்தௌ மாட்டார்கள், பௌத்த மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தௌ மாட்டார்கள் என்ற தூர நோக்கு திட்டத்தின் அடிப்படையில் தான் இனவாதத் தேரர்கள் இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
இந்த பின்னணியில் தான் ராவண பலய அமைப்பின் இனவாத தேரர்கள் குழு அபேயராம விகாரையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்து நோக்கப்படுகின்றது.
பௌத்த பிக்கு ஒருவர் யானை ஒன்றை அனுமதியின்றி பராமரித்ததற்காக பொலிசார் அவரை கைது செய்ததை முன்னிறுத்தி மீண்டும் வில்பத்து விடயத்தை தூக்கிப்பிடித்து ரிசாதுக்கு எதிராக அதனை திசைதிருப்பி அவருக்கு மரணத்தை ஏற்படுத்துவதே இதன் பின்னணியாகவுள்ளது.
பௌத்த தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டது என்பது சட்டத்திற்கு உட்பட்ட விடயம். அதனை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ரிசாதுடன் தொடர்புபடுத்தி அவர் ஆயிரம் யானைகளை கொன்றார் என குற்றம் சாட்டுவதை நோக்கும் போது ரிசாதை எந்த வகையில் ஏனும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் இனவாதத் தேரர்கள் குறியாக இருப்பது புலனாகின்றது.
நாரஹென்பிட்டி அபேயராம விகாரை என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்திற்கு உட்பட்ட விகாரையாகும். இதன் மூலம் ராவய பலய, பொதுபலசேனா போன்ற இனவாதக் குழுக்கள் மகிந்தவால் இன்றும் போசிக்கப்பட்டு வருகின்றமை அம்பலமாகின்றது.
இந்த விகாரையில்தான் ரிசாதை தூக்கிலிட வேண்டும் என்ற கருத்து விதைக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து பௌத்த தேரர்களிடமும் கொண்டு செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசு அமையப்பெற்றபின் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இதுவரை 48 பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள் பௌத்த தேரர்கள் மத்தியில் பெரும் தளம்பல் நிலையை தோற்றுவித்துள்ளது. இந்தக் கைதுகள் நல்லாட்சி அரசையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அச்ச சூழ்நிலையை வைத்து ரிசாதை கொண்றொழிக்கும் சூழ்ச்சித் திட்டம் அரங்கேறவுள்ளதாகவே நம்பகரமாக தெரியவருகின்றது.
மகிந்தவின் ஆட்சியை அழிப்பதற்கு முன்னின்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே இவ்வாறு ரிசாதுக்கு மரண நாள் குறிக்கும் சூழ்ச்சி வகுக்கப்பட்டுள்ளது.
45 அமைச்சர்களைப்போல ரிசாதும் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு சுகபோகமாக வாழ்ந்து விட்டு போகமுடியும். ஆனால் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து முஸ்லிம் சமுகத்திற்காக, அந்த சமுகத்தின் நிம்மதியான வாழ்வுக்காக போராடியதற்காகத் தான் இவ்வாறு மரண நாள் குறிக்கும் செயற்பாட்டை இனவாதத் தேரரர்கள் ரிசாதுக்கு முன்னெடுத்துள்ளார்கள்.
இனவாதத் தேரர்களின் ரிசாதுக்கு எதிரான இந்த படையெடுப்புக்கும் போராட்டத்திற்கும் பலணபலத்துடனான சூழ்ச்சித் திட்டத்திற்கும் சொற்ப முஸ்லிம்களாகிய எம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் ஒன்றையொன்றை மட்டும்தான் எம்மால் செய்ய முடியும். அது தான் ரிசாத் பதியுதீனுக்காக இறைவனிடம் ஐவேளைகளிலும் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுவது.
முஸ்லிம்களாகிய நாம்தான் அல்லாஹ்வுக்கு அடுத்தாக இந்த ரிசாத் பதியுதீனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். இதனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு ரிசாதின் பாதுகாப்புக்காக, ரிசாதின் ஆயுள் நீடிப்புக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.