மு.கா மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணிக்கான ஒன்றுகூடல் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணிக்கான ஒன்றுகூடல் இன்று (12) சனிக்கிழமை பாலமுனையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. 

 

rauff hakeem harees slmc thavam naseer

கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின்முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சிலின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இவ்வொன்றுகூடல் நிகழ்வில்இளைஞர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் சகல பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாவட்ட இளைஞர் தொண்டர் அணிஅங்கத்தவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய புத்தகத்தை தலைவரிடம் கையளித்தார்.

இதன்போது  கருத்துத் தெரிவித்த மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம்,

கட்சியின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர்  ஒன்றுகூடல் மூலம் மாநாட்டு விடயங்கள் மாவட்டத்தின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் இளைஞர்கள் ஊடாக ஏற்பட்டுள்ளது. அத்தோடு இவ் இளைஞர்களுடன் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒரு சிநேகபூர்வகிரிக்கெட் சுற்றுப்போட்டியையும் நடாத்துவதற்கு கட்சியின் பிரதித் தலைவர் பிரதி அமைச்சர் ஹரீஸ் வழங்கிய யோசனையை வரவேற்கின்றேன். பாராட்டுகின்றேன்.

 

1909771_1243208409040580_385786553748887561_n_Fotor

இவ் ஆலோசனையை கட்சியின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் ஏற்று இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வினை விரைவாக ஏற்பாடு செய்த முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்குஎனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறான இளைஞர் தொண்டர் அணியினை ஏனைய மாவட்டங்களிலும் அமைத்து கட்சியின் செயற்பாடுகளுடன் இளைஞர்களை இணைப்பதற்கு கட்சியின் தலைமை இன்றிலிருந்து முடிவு செய்துள்ளது என்றார்.