“என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம்” : ஜனாதிபதி !

Maithri3
“என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும்  நேற்று 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.