தற்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் திறமையானவர் யார் ?

தற்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் திறமையானவர் யார் ? என்ற கேள்வியை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவிடம் முன் வைத்தபோது அவர் பின்வருமாறு தனது கருத்தைக் கூறினார் ,

mohideen bawa 

எது எவ்வாறு இருப்பினும் யார் என்ன சொன்னாலும் தற்போது ஆட்சியில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளில் ஒப்பிடும் போது திறமைசாலி அமைச்சர் றிசாத் பஹியுத்தீன் அவர்கள்தான்  என்றே கூற வேண்டும் . நான் கூறியது தற்போது ஆட்சியில் உள்ளவர்களில் , எதிர் காலத்தில் இவரைவிட திறமை சாலிகள் வரக் கூடும் ,அல்லது அதிகாரம் இல்லாமலும் சிலர் இருக்கக் கூடும். 

 

ஒரு  மனிதனுக்கு சில பலகீனம் ,குறைபாடுகள், குற்றம்கள் ,சுய நலம் என்பன இருப்பது சகஜம் , இவைகளை சமூகம் தூக்கிப் பிடித்தால் நஷ்டம் அடைவது அவரல்ல நாம்தான் .ஏன் எனில் அவர் பதவியில் உள்ளவர் , இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடம்களுக்கு அவர்தான் அமைச்சராகவிருப்பார் ,அது மட்டுமல்ல அவரிடம் ஒரு பாரிய அமைச்சுப் பதவியும் கொடுக்கப் பட்டுள்ளது ,ஆகையால் சமூகம் அவரது கையைப் பலப் படுத்துவதுதான் தற்போதய அரசியல் நிலைப் பாட்டில் முஸ்லிம் சமூகம் அனுசரிக்கக் கூடிய ஒன்றாகும் என்பது என்கருத்து . 

 

அமைச்சர் றிசாத் பயுத்தீன் அவர்கள் எக்  கட்சியாய் இருப்பினும் அது தற்போது நமக்கு தேவை இல்லாத ஒரு விடயம் ஏன் எனில் அவர் ஒரு அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர் ஆதலால் கட்சி பேதம் இன்றி அவரது சேவைகளைப் பெறுவதுதான் சாதுரியம் எனக் கருதுகிறேன் 

 

அவ்வாறு இல்லையெனில் மேலும்  நான்கு அல்லது ஐந்து வருடம்களுக்கு ஒரு திறமை சாலி வரும் வரை காத்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள் எதிர்வரும் தேர்தல்களில் நீங்கள் கருதும் திறமிசாலி யார் என்று தேர்வு செய்வது உங்கள் கையில்தான் என்பதை நான் இங்கு கூறவேண்டிய அவசியமில்லை .

 

இது எனது தற்போதுள்ள அரசியல் கள சூழ் நிலையில் கூறக் கூடிய கருத்தாகும் எனக் கூறினார் .

ஊடகப் பிரிவு  – NDPHR Democratic Party for Human Rights