இலங்கைக்கு , மனித உரிமைகள் பேரவையின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வேண்டுகோள் !

united nation

 

இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தற்போது இருப்பதையும் விட அதிக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று மனித உரிமைகள் பேரவையின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும் இலங்கை தற்போது மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் அதற்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். 

அத்துடன் இலங்கை சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தும் போது இப்போது இருப்பதையும் விட நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதவிர மனித உரிமைகள் விடயங்களில் இலங்கைக்கு எவ்வாறான உதவி, உபகாரங்களை வழங்குவது என்பது சம்பந்தமாக சர்வதேச சமூகத்தை மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைன் தௌிவுபடுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.