மனோ , ராதா, திகாம்பரம் இணைந்து புதிய கூட்டமைப்பு !

mano_Fotor

 இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன. 

 வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்தே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவுள்ளன.

 இது தொடர்பில் பூர்வாங்க பேச்சுக்கள் நடந்துள்ளதாகவும் புதிய கூட்டமைப்பு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார். ‘தமிழர்கள் செறிந்து வாழும் மேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் எமது கட்சி இயங்குகின்றது’ என அவர் கூறினார்.

 இந்த கட்சிகள் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கூட்டணிகளில் இருந்தவை. மேலும், இந்த மூன்று கட்சிகளும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களுடன் கூடிய பங்காளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். f