ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் : இந்தியாவில் ஹக்கீம் !

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சென்னை சென்றிருந்தார் . சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

rauff hakeem slmc

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க காதர்மொய்தீன் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.

இலங்கையில் வட கிழக்கு மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் தமிழர்கள் என அனைத்து தமிழர்களும் மறுகுடியமர்த்தும் வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு செலவில் தமிழர்களுக்கு 65 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. தமிழர்களின் வளர்ச்சி பணிகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.

போருக்கு பின் வடகிழக்கில் தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை நாட்டின் முன்னேற்றத்துக்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கியில் இருந்து நிதியுதவி பெற்று இலங்கையில் குடிநீர் மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆட்சியில் (ராஜபக்சே ஆட்சி) ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.