க.கிஷாந்தன்
பெருந்தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தை தனது வருமானமாக நம்பி இருந்த தொழிலாளர்கள் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் பல்வேறுப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியாக மற்றும் வருமான ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.
பெருந்தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளை அரசாங்கம் வழங்கவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் வரட்சி ஏற்பட்டு வருவதால் தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக வாரத்தில் மூன்று அல்லது இரண்டு நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
அத்தோடு அதிகமான பனி பொழிவதால் தேயிலை செடிகள் கருகின்ற தன்மையில் உள்ளது. தற்போது கடுமையான வெயிலான காலநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் பல்வேறுப்பட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைபாடு தோன்றியுள்ளது.