நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற கடும் மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேர காலப்பகுதியில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகையில்,
தொடர்ச்சியான கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேர காலப்பகுதியில் நேற்றுக்காலை வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரம் நாடளாவிய ரீதியாக 192 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நாட்டில்நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழையின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த குறிப்பாக கொழும்பு – ராஜகிரிய பகுதியில் உள்ள சில குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சீரற்ற காலநிலையி
னூடான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
மின்னல் தாக்கம் காரணமாக இவ் வருடம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவ லில் தெரிவிக்கப்பட்டுள்ளது.