மூத்த ஊடகவியலாளர் என்.நவரட்ணராஜா இயற்கை எய்தினார் !

navam_002_Fotor
மூத்த ஊடகவியலாளரான என்.நவரட்ணராஜா (வயது 62) இன்று அதிகாலை 2.45 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று கடுமையாக சுகயீனமுற்றதால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

மேலும் இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். 

முன்னாள் கிராம நிர்வாக அலுவரான இவர் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டவராவார். யாழ்ப்பாணத்தில் போர் நெருக்கடி மிகுந்த காலத்திலும் பணியாற்றியவர். இவர் செய்தியாளராகவும் நீண்டகாலம் செயற்பட்டவர். 

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவரான அவர் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட், உதைபந்தாட்ட மத்தியஸ்தருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னாரின் பூதவுடல் மல்லாகம், சோடா கம்பனி ஒழுங்கையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.