அவுஸ்திரேலிய கடற்படையினர் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து பாரியளவிலான ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
ஈரானிலிருந்து இந்த ஆயுதங்கள் யேமனுக்கு எடுத்துச் செல்லும் வழியில் கடற்படையினர் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
டார்வின் பகுதி கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் இந்த மீன்பிடிப் படகை மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போது பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ.கே. 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.