அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி , இன்று பிர­தமர் பதவி கேட்டு மகிந்த – அனுர குமார

maxresdefault_Fotor

 அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க.

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை மஹிந்த அணி யின் மக்­களை ஏமாற்றும் பித்­த­லாட்டம் என்றும் அவர் தெரி­வித்தார்.பெல்­வத்­தையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ஜே.வி.பி. தலை­வரும் எம்­பி­யு­மான அநுர திஸா­நா­யக இவ்­வாறு தெர­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்று தனக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய பிர­தமர் பத­வியை கேட்டு அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சுற்றி வந்தார்.

ஆனால் அப்­ப­தவி மைத்­தி­ரிக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.இன்று பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் கேட்டு மஹிந்த ராஜ­பக்ஷ – மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுற்றி வரு­கிறார்.இத­னைத்தான் விதியின் விளை­யாட்டு என்­பது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன்று முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­தோடு மஹிந்த அணி மைத்­திரி அணி என இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது.

குரு­நா­க­லையில் இடம்­பெற்ற மஹிந்த அணி கூட்­டத்தில் 30 பேருக்கும் குறை­வான எம்.பி. மாரே கலந்து கொண்­டனர்.கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சர்­வா­தி­கார தோல்வி கண்­டாலும் மஹிந்­தவின் அணி தோல்வி காண­வில்லை. அந்த அணிதான் இன்று ஆட்டம் போடு­கி­றது.

எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்­தினால் இந்த அணியின் ஆட்டம் அடங்கி விடும்.ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை கொண்டு வரப்­போ­வ­தாக கூறும் மஹிந்த அணியின் கருத்­துக்கள் மக்­களை ஏமாற்றும் பித்­தா­லாட்டம் ஆகும்.

ஏற்­க­னவே ஜோன் அம­ர­துங்க ரவிகருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைகள் கொண்டு வருவதாக கூறினார்.அதெல்லாம் எங்கே போனது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.