அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அனைத்து நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளரை, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, ரமேஸ் பதிரன, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ஜயந்த சமரவீர மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது போதியளவு கால அவகாசம் வழங்கப்படாமை, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்குதல், நாடாளுமன்ற குழுக்களில் போதியளவு அங்கத்துவம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான எழுத்து மூல முறைப்பாடு ஒன்றை கூட்ட எதிர்க்கட்சியினர் ஏற்கனவே ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.