இந்த செயற்பாடு கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்சவின் சூழ்ச்சி என கூறி அதற்கு தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்காரவினால் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டமையே புதிய கட்சி தீர்மானம் கைவிட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் எந்தவொரு மோதலை ஏற்படுத்தி கொள்ளலாம். எனினும் புதிய கட்சி என்ற நிலைப்பாடு நிச்சியம் தோல்வியடையும் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ அல்லது பசில் ராஜபக்ஷவுக்கு ஒருபோதும் முன்னணியின் தலைமை பதவி கிடைக்கப் போவதில்லை. இதன்காரணமாக அதிருப்தி அடைந்த நிலையில் வேறு கட்சி அமைக்கும் சூழ்ச்சியினை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன போன்ற மூத்த முன்னணி தலைவர்கள் உட்பட பலரின் கருத்தாகவுள்ளது.
இதற்கு மேலதிகமாக உதய கம்மன்பின மற்றும் விமல வீரவன்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி குழுக்களினால் மேற்கொள்ளப்படும், எதிர்ப்பிற்கு தினேஷ், வாசு குழுவினர் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மார்ச் மாதம் 17ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினால் ஹய்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதல் பேரணியின் “இந்திய ஆக்கிரமிப்பு” என்ற தலைப்பிற்கு பதிலான “எட்கா ஒப்பந்தம்” என மாற்றுவதற்கு விமல், கம்மன்பில இணக்கம் வெளியிட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.