72 மணித்தியாலயங்களில் சிக்காகோ பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : டலஸ் !

Dullas
 
 பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி நாளை நாடாளுமன்றில் கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளது.

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்க உள்ளது என கேள்வி எழுப்பப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்… 

72 மணித்தியாலயங்களில் சிக்காகோ பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 3 இடம்பெற்றுள்ளன. 

கடந்த மாதத்தில் மட்டும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளினால் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர். 

நாட்டில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

பயங்கரவாதத்தையும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளையும் இல்லாதொழிக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

எனினும் நல்லாட்சி அரசாங்கம் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள் தலைதூக்க ஏதுவாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.