ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு கோரிக்கை விடுத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜகத் ஜயசூரிய வெளிவிவகார அமைச்சின் அனுமதி மற்றும் செலவில் இலங்கை வந்துள்ளதாக அறிந்து கொண்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குமூலம் பெற வேண்டிய தேவை இருப்பதாக கூறிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறையில் நான் இலங்கை வந்துள்ளேன்,
விடுமுறையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து அலைய முடியாது.
உங்களுக்கு எனது வாக்குமூலம் வேண்டுமாயின் அரச செலவில் எனது பயணச்சீட்டை அனுப்புங்கள்.
நான் சாதாரணமாக அல்ல முதல் வகுப்பிலேயே பயணம் செய்வேன், தங்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் இருக்கும் ஹொட்டலில் அறை ஒன்றை முன் ஆயத்தம் செய்து வையுங்கள் என முன்னாள் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜகத் ஜயசூரிய விடுமுறையில் வருவதென்றால், அவரது சொந்த செலவில் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வெளிவிவகார அமைச்சே அனைத்து செலவுகளை ஏற்றுள்ளது.
அரச செலவில் மீண்டும் வர முடியும் என்ற காரணத்தினாலேயே ஜகத் ஜயசூரிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வர மறுத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.