அபு அலா
அட்டாளைச்சேனை ஷர்க்கியா கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவு வைர விழா மற்றும் 8 வது மௌலவி பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிமை (06) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி.எம்.இஷாக் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதிகளாக ஜக்கிய அரேபிய இராஜ்ஜியத்தின் தூவர் அப்துல் ஹமீட் ஹாசீம் அல் முல்லா, குவைத் நாட்டுக்கான தூதுவர் கலாப் எம்.எம்.வூ தாஹ்ஹர் மற்றும் அமைச்சர் றஊப் ஹக்கீம் கிழக்கின் முதலமைச்சர் இஸட்.ஏ.நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண உறுப்பினர் எ.எல்.தவம், கிழக்கின் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு இஸ்லாமிய பாரம்பரிய கலாச்சார நிகழ்வுக்கு அமைவாக பிரதம, கௌரவ, விஷேட அதிதிகள் ஆகியோர் ரவான், பொல்லடி, கசீதா போன்ற அம்சங்களுடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், முன்னாள் அதிபர்கள், ஆளுநர் சபை நிருவாகிகளும் இந்நிகழ்வின்போது அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் கடந்த 2006 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மௌலவி கற்கை நெறியை பூர்த்தி செய்த 84 விஷேட உலமாக்களும் 2 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு கல்லூரி தொடர்பான 60 வது ஆண்டு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படது.