இலங்கை – சுவிட்சலாந்து அரசுகளிடையில் ஒப்பந்தம் ,தஞ்சம் கோரியுள்ளவர்களின் எதிர்காலம் கேள்விற்குட்படலாம் ?

mangala samaraweera
 வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுவிஸர்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

சுவிட்சலாந்து தலைநகர் பேர்னில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

சுவிஸர்லாந்தில் ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் இவர்களில் சுமார் 24 ஆயிரம் பேர் வரை சுவிஸர்லாந்தில் நிரந்தர குடியுறிமை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்கழி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிஸ் அதிகாரிகள் இலங்கையில் பிரச்சினைகள் தீரக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சுவிட்சலாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் நதியா போலன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு சுவிஸ்லாந்து முன்வர வேண்டும் என வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

ஆசியாவின் சுவிட்சலாந்தை கட்டியெழுப்புவதற்கு சுவிஸ் அரசினதும், சுவிஸ் வாழ் இலங்கையினரதும் உதவி மிகவும் பிரதானமானது என இவ்வுரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் சுவிஸ்லாந்து வெளிவிவகார பிரிவு இலங்கையில் தடை செய்யப்பட்டு இருந்ததுடன், பல சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தது.

2015ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் புதிய ஆட்சியாளர்களின் வருகையின் பின்னர் இவ்வமைப்பினது தடை தகர்க்கப்பட்டதுடன், சுயாதீனமாக இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

2017 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கையினை முழு வீச்சுடன் கட்டியெழுப்புவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இவ்வுரையாடலில் கலந்துகொண்ட இலங்கை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான இழப்புகளை சந்தித்த சூழ்நிலையில், 10 ஆயிரம் பொது மக்களும், 10 ஆயிரம் விடுதலை புலிகள் உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக சுவிஸ் ஊடகம் ஒன்று சுட்டிக்காட்யுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்த அம்நெட்டி இன்டெர்நெஷனல் அமைப்பு இலங்கையில் ஜனநாயகம் திரும்பியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சுவிஸ்லாந்தில் தஞ்சம் கோரியுள்ளவர்களின் எதிர்காலம் கேள்விற்குட்படலாம் என்ற அச்சம் எதிர் காலங்களில் ஏற்படலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுவிஸ் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் கடந்த காலங்களில் இலங்கையில் சுமூகமான சூல்நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை அரசாங்கம் கூறி சுவிஸர்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை அகதிகள் பலர் இலங்கை சென்று கைதுகள், சித்திரவதைகளுக்கு ஆளாகியதாக   தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் சுவிஸ் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற இவ்வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த ஒப்பந்தம் வெளிப்படை தன்மையுடையதாக இருந்தாலும் இவ் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்வொரு அறிவிப்யையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டதக்கது.