80 மில்லியன் ரூபா செலவில் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நடப்பட்டது !

எம்.ரீ. ஹைதர் அலி
 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சீதனவெளி கிராமத்தில் புதிய ஆடைத்தொழிற்சாலை  அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.03.02ஆந்திகதி புதன்கிழமை  காலை 10.00 மணிளயவில் நடைபெற்றது.
 hafees nazir anwarb
இந்நிகழ்வானது எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  கௌரவ. இரா. சம்மந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கட்டிடத்திற்கான முதலாவது அடிக்கல்லினையும் அவர் நட்டி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ.  எஸ். தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ. கி. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ. ஆர்.எம். அன்வர், ஜெ. ஜனார்த்தன் மற்றும் கு. நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
12771565_10208360206112377_3370217113896963288_o_Fotor_Fotor
இவ்ஆடைத்தொழிற்சாலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஆர்.எம். அன்வர் அவர்களிடம் வினவியபோது… 
சுமார் 3.6 ஏக்கர் நிலப் பரப்பில் 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற இவ்ஆடைத்தொழிற்சாலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 350 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென தெரிவித்தார்.
 12783774_10208360221192754_5821906299732682900_o_Fotor