கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இனவாதம், மதவாதம் இல்லாத நாடாக முன்னோக்கிய பயணத்தை செல்ல வேண்டும். ஒரு தரப்பினரை எதிர்த்து, ஒரு தரப்பினரை மகிழ்வித்து கொண்டு இந்த பயணத்தை செல்ல முடியாது.
நான் அரசியலில் தோற்கவில்லை. தேர்தலில் நான் போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.
புலி, சிங்கம் போன்ற விலங்குகளை போல், அடிக்கடி தென்படாது, எனக்கு தேவையான நேரத்தில் மாத்திரம் குரல் கொடுப்பேன்.
நாட்டுக்காக தனியாக என்றாலும் குரல் கொடுப்பேன். நான் இன்னும் அரசியலில் இருந்து விலகவில்லை. தேங்காய் உடைப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிமை இருப்பதால், அது பற்றி நான் எதனையும் கூறப்போவதில்லை.
காளி கோயிலில் விலங்குகள் பலியிடப்படுவதை நான் எதிர்த்த போது, எனக்கு எதிராக தேங்காய் உடைத்தனர். நான் சரியான முறையில் இருந்ததால், தேங்காய் உடைத்தில் பலன் எதுவும் ஏற்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது போல், மக்களை மாட்டு இறைச்சி உண்ணும் பழக்கில் இருந்து மாற்ற வேலைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.