பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலீடாக மாற்று சட்டம் அறிமுகம் ?

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக மாற்றுச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

sri-lanka-government-national-emblem-logo-crest-ensign-raajya-rajya-laanchanaya-lanchanaya-wiki-wikramarathna-wickramaratne-almanac-data-portal-600x736_Fotor

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக அல்லது அதில் திருத்தங்களைச் செய்யும் வகையிலான உத்தேச வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆணைக்குழு மற்றும் சட்டவாக்கத் திணைக்களத்தினால் இந்த உத்தேச வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்ட வரைவுத்திட்டம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரிடம் இந்த உத்தேச வரைவுத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தேச சட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டது என சட்டவாக்கத் திணைக்களத்தின் தலைவர் சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.