ஊடகவியலாளர்களை கொலை செய்த மற்றும் வெள்ளை வான்களில் கடத்திச் சென்றவர்களுக்கு அன்று ஊக்கம் கொடுத்தவர்கள், தற்போது ஊடக சுதந்திரத்தை பற்றி பேசுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி கங்கவட்டகோரள பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சில நேரம் எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைப்போம். எனினும் ஊடகவியலாளர்களுடன் எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் ஊடகவியலாளர்களை கொலை செய்யவில்லை என்பதை விமல் வீரவன்ஸவிற்கு கூற விரும்புகிறேன்.
ஊடகவியலாளர்களை கொலை செய்யவில்லை என்பதுடன் அவர்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்றதும் இல்லை. இவற்றை செய்வதற்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தற்போது ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்றனர்.
பல வருடங்களுக்கு பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேலை செய்தவர்களின் தகுதியை பார்த்து சிபாரிசு கடிதம் கொடுப்பது தவறா?.
அரசியலமைப்பு சம்பந்தமான யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டால், சர்வதேசத்தில் இருந்து வரும் எதிர்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.