பெயர்ப்பலகையில் மாத்திரம் தரமுயர்த்தப்பட்டுள்ள புல்மோட்டை தள வைத்தியசாலை !

pulmottai hospital
திருகோணமலை மாவட்டத்தில் 1951ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக (Central Dispensary) உருவான புல்மோட்டை வைத்தியசாலை பின்னர் 1959ஆம் ஆண்டு மத்திய மருந்தகமும், பிரசவ விடுதியாகவும் (Central Dispensary & Metenity Home) தரமுயர்த்தப்பட்டு 1994ஆம் ஆண்டு முன்னால் சுகாதார அமைச்சராக இருந்த கௌரவ. A.H.M. பௌஷி அவர்களது காலத்தில் கிராமிய வைத்தியசாலை என்று அல்லாமல் சுற்றயல் கூறு (Periparal Unit) என்ற தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதோடு, சமகாலத்தல் மூன்று வைத்தியர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இவ்வைத்தியசாலையில் நன்நோக்கம் கொண்ட வைத்தியர், திணைக்கள அதிகாரிகள் இங்குள்ள பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்களின் முயற்சியினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. M.S. சுபைர் அவர்களினாள் தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
தரமுயர்த்தப்பட்டு சுமார் நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இன்றுவரை தள வைத்தியசாலை என்பதற்கான பெயர்ப்பலகை கூட மாற்றம் செய்யப்படாமல் தனி ஒரு நபரின் முயற்சியால் பிரதேச வைத்தியசாலை – புல்மோட்டை என்ற பெயர் பலகையில் பிரதேச என்ற வசனத்திற்கு மேலால் மாத்திரம் தள என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அத்தோடு, நான்கு வருடங்கள் கடந்தும் இன்றுவரை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் நடைபெறுவதில்லை இதுதான் இன்றைய புல்மோட்டை தள வைத்தியசாலையின் நிலைமையாகும்.
இவ் வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப மருத்துவ வசதிகள், ஆலனிகள் மற்றும் கட்டடங்கள் போன்ற பல குறைபாடுகளோடு பூரனப்படுத்தப்படாமல் இதற்கான எதுவித நடவடிக்கைகளும் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் மேற்கொள்ளப்படாமலும் கானப்படுகின்றது. இவ்வாறான பல குறைபாடுகளுக்கு மத்தியில் கானப்படும் இவ்வைத்தியசாலையினால் புல்மோட்டை மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
மேலும் இவ்வைத்தியசாலைக்கான அபிவிருத்திகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி கிடைக்கப் பெற்றாலும் குறிப்பிடத்தக்க சிலரால் தடுத்து நிறுத்தப்படுகின்றது. இதற்கான காரணம் அரசியல் பின்னனியாகவோ அல்லது இவ்வைத்தியசாலை முன்னேற்றமடைந்தால் தங்களுக்குரிய அதிகாரங்கள் குறைந்து விடுமோ என சில அதிகாரிகள் நினைக்கலாம் என அங்குள்ள பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திருமலை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியேரினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வவைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யபட்டு தீர்வு கிடைக்கப் பெறுமா என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
தௌபீக் முஹம்மது முபஸீர்
புல்மோட்டை