ஏ.எஸ்எம். ஜாவித்
கட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் பணிகளை மீள ஆரம்பிக்கும் வகையில் அதனை பார்வையிடுவதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (01) அமைச்சர் ஹலீமின் அழைப்பின் பெயரில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவருடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர். இவர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் வரவேற்று கட்டிடத் தொகுதியை அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு காண்பித்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு திணைக்களத்தின் தேவை கருதி சுமார் 9 மாடிகளைக் கொண்ட கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் ஒன்பது மாடிகள் கட்டப்பட்ட நிலையில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசால் கட்டிட வேலைகளுக்கான நிதி நிறுத்தப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டிட வேலைகளை ஒப்பந்தகாரர்கள் நிறுத்தியிருந்தனர்.
எனினும் புதிய தேசிய நல்லிணக் அரசு பதவிக்கு வந்த பிறகு இதன் வேலைகளை ஆரம்பிக்கும் விடயங்கள் அரசுக்கு அமைச்சர் ஹலீமினால் முன் வைக்கப்பட்டிருந்தன. இதன் நிமிர்த்தம் அமைச்சர் மேற்படி கட்டிடத்தின் நிலைமைகளை கண்டறிந்து முதற்கட்டமாக மூன்று மாடிகளை பூரணப்பட்டுத்தித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இவ் வேலைகளை முடிக்க சுமார் 284 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.