க.கிஷாந்தன்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் மகளீர் அமைப்பின் தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த மகளீர் தினம் ”மலையக பெண்களே விழித்தெழுவோம் மகளீரை அரசியலில் வளர்த்தெடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலையக பெண்கள் கடந்த காலங்களில் அரசியலில் ஈடுப்படுவது மிகவும் குறைவாக காணப்பட்டது. மலையக பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் அரசியலில் பெண்கள் ஈடுப்பட வேண்டும். அப்போது தான் பெண்களின் பிரச்சினைகளை அரசியல் மையப்படுத்தப்படுவதோடு அதனை சர்வதேச மட்டத்திற்கும் தேசிய மட்டத்திற்கும் கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும். இதன் காரணமாகவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் அதிகமான பெண்களை எமது கட்சி களமிறக்க தீர்மானித்துள்ளது.
13ம் திகதி நடைபெறவுள்ள மகளீர் விழாவில் முன்னால் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யவுள்ளோம். மேலும் தொழிற்சங்கங்கள் பேதமின்றி அனைத்து பெண்களும் மகளீர் தின விழாவில் கலந்து கொண்டு இதுவரை காலமாக இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு குரல் கொடுக்க உறுதி செய்ய வேண்டும்.
எங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று பலம் பெற்றுள்ளது. இதனை பொருத்துக்கொள்ள முடியாத சிலர் முற்போக்கு கூட்டணி உடையும், பிளவு ஏற்படும் என கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஒருபோதும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிளவு ஏற்பட போவதில்லை.
மாறாக பலம் பெருமே தவிர அது எந்த விடயத்திலும் பின்னடைய போவதில்லை. எனவே எங்களது கூட்டணியை விமர்சிக்கும் நபர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை காலமாக விமர்சனம் செய்பவர்களும் கூட பல கூட்டமைப்புகளை அமைத்தார்கள் ஆனால் அது இன்று நடைமுறையில் உள்ளதா என அவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று முற்போக்கு கூட்டணி மலையக மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் மலையக மக்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும், தேசிய நீரோட்டத்திலும் கலக்கம் செய்வதற்கு உறுதியோடு செயல்பட்டு வருகின்றதை அணைவரும் புரிந்துருப்பார்கள்.
எனவே இவ்வாறான சிந்தினை மாற்றம் பெறாத நபர்களால் மக்களுடைய மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு செயல்படுவதில் எவ்வித அர்த்தங்களும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.