நாடாளுமன்றில் பெறுமதி மதிப்பீடு செய்ய முடியாதளவிற்கு நிதி மோசடி – விசாரணைகள் ஆரம்பம் !

நாடாளுமன்றில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ள பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
SL_Parliament_Fotor

பெறுமதி மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நூறு கோடிக்கு மேல் பெறுமதியான கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யும் இயந்திரத்தை கொள்வனவு செய்து சொற்ப காலத்தில் பயன்பாட்டிலிருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

நாடாளுமன்ற ஊழியர்களின் வரவு பதிவு மற்றும் ஏனைய விபரங்களை இந்த இயந்திரம் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.பழுதடைந்த இந்த இயந்திரத்தை சீர்செய்ய எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நாடாளுமன்ற பணியாளர்களுக்கான வெளிநாட்டு பயண புலமைப் பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

 

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.