ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது உறுப்புரிமைக்காக மீளவும் அமெரிக்கா போட்டியிடும் என தெரிவித்துள்ளது.

USA_Sri-Lanka_Flag

 

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா நான்கு தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
பக்கச்சார்பற்ற, நம்பகமான, காத்திரமான மனித உரிமைப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாக உலக மனித உரிமைப் பெறுமதிகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் திடமான நம்பிக்கை என தெரவித்துள்ளது.

மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு உலகின் பல பிராந்திய நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.