முதலமைச்சருக்கெதிரான மொட்டைக்கடிதத்திற்கு அஸ்மீன் அய்யூப் தான் பொறுப்பு !

பாரூக் சிகான் 
ஹோட்டலுக்கு அழைத்தார். வீடு தேடி வந்து அஸ்மீன் அய்யூப் கடிதம்  கையெழுத்து வாங்கினார் பேரினவாத சக்தியுடன் இணைந்துள்ளாரா என  எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என குற்றம் சாட்டினார் மாகாண சபை உறுப்பினர் சிவநேசன்.
vigneswaran aiyum asmin
வடமாகாண சபையின்  46 மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கடந்த  வியாழக்கிழமை (25) நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
இதன்போது கருத்துத் தெரிவித்த சிவநேசன் பிரேரணை கொண்டு வரும் போது நான் அமர்வில் இல்லை. இருந்திருந்தால் எதிர்ப்பை வெளியிட்டிருப்பேன். என்னிடம் ஒருமுறை ஆளுங்கட்சி உறுப்பினர்  அஸ்மின் அய்யூப்  கையெழுத்து வாங்கினார் என்றார். இதன்போது குறுக்கிட்ட அஸ்மின் ‘எப்போது கையெழுத்து வாங்கினேன்?’ என தடுமாறினார்.
 அதற்குப் பதிலளித்த சிவநேசன் ‘முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைமை வகிக்கக்கூடாது என நீங்கள்  தானே கையெழுத்து வாங்கினீர்களே!’ என்றார்.
 
 சற்றும் எதிர்பாராத இந்தக் கருத்தை சமாளித்த அஸ்மின் அது கட்சித் தலைமை கேட்டதன்  அடிப்படையில் வாங்கினேன்’ என்றார். 
ஆயினும் விடாமல் தொடர்ந்த சிவநேசன் ‘விவசாய அமைச்சருக்கு எதிரான பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர்(யு.எஸ்) விடுதியில் கலந்துரையாட வருமாறு கூப்பிட்டீர்கள் தானே!’ என்றார். 
அதற்குப் பதிலளித்த அஸ்மின் ‘அது கட்சி அரசியல் சம்பந்தப்பட்ட விடயம். அதனை இங்கு கதைக்க முடியாது என மழுப்பலாக பதிலளித்தார்.
 மேலும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர் சிலர் அதற்கு முன்னர்  யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் மேற்கொண்டமை யாவரும் அறிந்தமை குறிப்பிடத்தக்கது.